Seed Certification
விதை சேமிப்பு :: அமைப்புகள்

சேமிப்பு அமைப்புகள்

முன்னுரை:

தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையின் உணவுத் தானியத் தேவையை சமன் செய்ய விதைகளின் அறுவடை மற்றும் அதற்குப் பின் இழப்பைக் குறைக்கவேண்டும். மக்களுக்குத் தேவையான மற்றும சமமான அளவில் ஆண்டு முழுவதும் விநியோகம் செய்ய விதைகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் சேமிக்கப்படுகின்றன. இந்தியாவில் அறுவடையின் பின் சார் இழப்புகள் 10 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் சேமிப்பில் இழப்புகள் மட்டும் 6.58 சதவீதமாக உள்ளது. ஆனால் இன்றைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விதை உற்பத்தியாளர்கள் விதைகளை நீண்ட காலம் சேதமடையாமல் சேமிக்கும் வசதிகள் உள்ளன.

விதைச் சேமிப்பின் சுகாதாரம் / கிடங்கின் சுகாதாரம்

  1. சேமிக்கும் சுற்றுப்புறம் பூச்சிகள் மற்றும் எலிகளின் தாக்குதல் இருக்கக்கூடாது.
  2. இராசயன பொருள்களான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை விதைகளுடன் சேமிக்கக்கூடாது.
  3. சேமிக்கும் அறை குளிர்ந்த மற்றும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
  4. வாயு நச்சு இடுதலை தேவைப்படும் போதெல்லாம் இடவேண்டும்.
  5. விதைப் பைகளை மரத்தட்டுக்களில் குறுக்கும் நெடுக்குமாக அடுக்கினால் பைகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் காற்றோட்ட வசதி கிடைக்கும்.
  6. விதைகளின் அடர்த்தியைக் கொண்டு விதைப் பைகளை 6-8 அடுக்குகளாக அடுக்கவேண்டும்.
  7. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் அடுக்கி வைப்பது விதை வீரியத்தை நீண்டகாலம் சேமிக்கும்.
  8. சேமிக்கும் முன் விதைக்கிடங்குகளை மாலத்தியான் 50 சதவிகிதம் ஈசி @ 5 லிட்டர் / 100 எம்எல் கொண்டு தெளித்து தொற்று நீக்கவேண்டும்.
  9. பழைய சாக்குகள், துணிப்பைகள்  மற்றும் கொள்கலன் பயன்படுத்தும் போது அலுமினியம் பாஸ்பைட் கொண்டு வாயு நச்சு செய்யவேண்டும்.
  10. அடுக்குகளின் அளவு 30x20 அடி இருப்பதுவாறு தடுக்கும் (அ) பாலித்தீன் மூடாக்குகளின் உள்ளே வாய்நச்சு செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
  11. அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செய்யவேண்டும். மாலத்தியான் 50 சதவிகிதம் ஈசி @ 5 லிட்டர் / 100 மீட்டர் என்ற அளவில் 3 வாரங்களுக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்.
  12. வாயுநச்சு அடிக்கடி செலுத்துவது விதைகளின் வீரியம் மற்றும் முளைப்புத் திறனை குறைத்துவிடும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். 14 சதவிகிதம் மேல் ஈரப்பதம் உள்ள விதைகள் வாயு நச்சு செலுத்தும் முன்னரே ஈரப்பதத்தை குறைக்கவேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam